Joomla TemplatesWeb HostingWeb Hosting

விசேட செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சுடலைக்குள் புதைக்கப்பட்டிருந்த பெருந்தொகை வெடிபொருட்கள் படையினரால் மீட்பு! 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேசத்தில் சுடலை ஒன்றுக்குள் புதைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிபொருட்களை விசேட அதிரடிப் படையினர்

சிங்கள பூமியாக மாறி வரும் மாதகல் பிரதேசம்! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

யாழ்ப்பாணம் - மாதகல் பிரதேசத்தில் அமைந்துள்ள சம்பில் துறைக்கு பெருமளவான தென்பகுதி மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளார்கள்.

இந்தியாவில் இருந்து வந்த சங்கமித்தை இப்பகுதியில்தான் வந்து இறங்கினார் என்று அவர்கள் கூறுகின்றனர். இம்மக்களின் வருகையோடு இங்கு பெரியதூபி ஒன்றும் புத்தர் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளன.

சம்பில் துறைக்கு சென்ற வருடம் ஜனாதிபதி மகிந்தராஐபக்ஸவின் பாரியாரும், அப்போது பிரதமராக இருந்த பிரதமர் ரட்ணஸ்ரீவிக்கரமநாயக்கவின் பாரியாரும் வருகை தந்திருந்தனர். இதனை அடுத்து இப்பகுதியை அதியுயர் இராணுவ பாதுகாப்பு வலயமாக படையினர் அறிவித்து விட்டனர்.

Click to open image! Click to open image!

Click to open image! Click to open image!

Click to open image! Click to open image!

Click to open image! Click to open image!

Click to open image! Click to open image!

Click to open image! Click to open image!

Click to open image! Click to open image!

Click to open image!

 

மலேசியாவில் கடத்தப்பட்டிருந்த இலங்கையர் மூவரில் இருவர் மீது பாலியல் வன்முறை!

மலேசியாவில் கப்பம் கோரி கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரில் இருவர் கடத்தல்காரர்களால் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

 

அந்த இருவரும் ஒருவரோடு ஒருவர் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கடத்தல்காரர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். இருவரும் இந்நிர்ப்பந்தத்தின் பெயரில் பாலியல் நடவடிக்கையில் ஒருவரோடு ஒருவர் ஈடுபட்டும் உள்ளனர்.

 

 

அதைக் கடத்தல்காரர்கள் வீடியோ எடுத்தும் வைத்துள்ளார்கள். ஆனால் இக்கடத்தல் சம்பவம் இந்த இலங்கையர் மூவரில் ஒருவரும், கடத்தல்காரர்களும் சேர்ந்து நடத்திய நன்கு திட்டமிட்ட நடவடிக்கை என்று மலேசிய பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரிய வருகின்றது.

 

கடத்தப்பட்ட மூவரில் ஒருவர் இறந்து விட்டார். இருவர் தப்பி விட்டனர். இந்த இருவரில் ஒருவருக்கும் கடத்தல்காரர்களுக்கும் முன்தொடர்பு உண்டு என்று பொலிஸார் நம்புகின்றனர். எனவே இருவரில் ஒருவர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.மற்றவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர் கடந்த எட்டு மாத காலமாக மலேசியாவில் இருந்து வருகின்றார் என்றும் அவர்தான் இரத்தினக் கற்களின் சில மாதிரிகளை விற்பனைக்காக மலேசியா கொண்டு வர வேண்டும் என்றும் ஏனைய இரு இலங்கையர்களுக்கும் சொல்லி இருக்கின்றார் என்றும் மலேசிய பொலிஸ் புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

மன்னாரில் படுகொலைச் சந்தேக நபர்கள் மூவருக்கு விளக்கமறியல்!

ஆண் ஒருவரைப் படுகொலை செய்து , சடலத்தை எரித்திருந்தனர் என்கிற சந்தேகத்தின் பேரில் மூன்று சந்தேகநபர்களை மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

 

 

மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிவான் கே.ஜீவராணியின் உத்தரவின் பேரில் இம்மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

 

மன்னார் மூர் வீதியில் காட்டுப் பள்ளி பகுதிக்கு பின்புறமாகவுள்ள கடற்கரைக்கு சற்றுத் எரிக்கப்பட்ட நிலையில் கடந்த 27 ஆம் திகதி இச்சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஆயினும் சடலம் யாருடையது ? என்பது இன்னமும் அடையாளம் காணப்படவே இல்லை.

 

இது ஒரு படுகொலைச் சம்பவம் என்று பொலிஸார் நம்புகின்றனர். புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்ட மன்னார் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கட்கிழமை 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை கைது செய்தனர்.அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் இருவரையும் பிடித்தனர்.

 

முதலில் பிடிக்கப்பட்ட நபர் நேற்றும், ஏனைய இருவரும் இன்றும் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டனர். நீதிமன்றம் மூவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கின்றமைக்கான உத்தரவைப் பிறப்பித்தது.

 

யு.எஸ்., ஓபன்: பெடரர் அசத்தல் வெற்றி: இவானோவிச் முன்னேற்றம்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ரோஜர் பெடரர் அசத்தல் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுக்கு செர்பியாவின் இவானோவிச் முன்னேறினார். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் "நம்பர்-2' வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அர்ஜென்டினாவின் பிரையன் டபுளை சந்தித்தார்.

 

இதன் முதல் செட்டை பெடரர் 6-1 என எளிதாக வென்றார். பின் அடுத்த செட்டையும் 6-4 என பெடரர் கைப்பற்றினார். மூன்றாவது செட்டிலும் அபார ஆட்டத்தை தொடர்ந்த பெடரர் 6-2 என தன்வசப்படுத்தினார். இறுதியில் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்கணக்கில் பெடரர் அசத்தல் வெற்றி பெற்றார். திணறல் வெற்றி: மற்றொரு ஒற்றையர் போட்டியில் சுவீடனின் ராபின் சாடர்லிங், ஆஸ்திரியாவின் ஆன்ட்ரியாசை 7-5, 6-3, 6-7, 5-7, 6-4 என்ற கணக்கில் போராடி வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

 

பிற போட்டிகளில் ஆன்டி ரோடிக் (அமெரிக்கா), டேவிடென்கோ (ரஷ்யா), மரின் சிலிக் (குரோசியா) போன்ற வீரர்கள் வென்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றனர்.முன்னாள் சாம்பியன் லேய்டன் ஹெவிட் (ஆஸ்திரேலியா), பிரான்சின் பால் ஹென்ரி மாத்யூவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இவானோவிச் அபாரம்: பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் செர்பியாவின் இவானோவிச், ரஷ்யாவின் மரகோவாவை 6-3, 6-2 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார்.

 

மற்றபோட்டிகளில் நடப்பு சாம்பியன் கிம் கிளைஸ்டர்ஸ், இத்தாலியின் பிளவியா பெனிட்டா, இஸ்ரேலின் சகர் பியர், பிரான்சின் மரியன் பர்டோலி, பெலாரசின் விக்டோரியா அசரென்கா, சீனாவின் ஜெங் ஜி, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். சபினா தோல்வி: மற்றொரு முதல் சுற்று போட்டியில் ரஷ்யாவின் டினரா சபினா, சுலோவேகியாவின் ஹண்டுசோவாவிடம் 3-6, 4-6 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். சோம்தேவ் தோல்வி ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை சந்தித்தார்.

 

இதில் 3-6, 4-6, 3-6 என்ற நேர்செட்கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றினார். சானியா வெற்றி பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, போர்ச்சுகலின் மைக்கேலி டி பிரிட்டோவை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை 6-3 என வென்ற சானியா மிர்சா, அடுத்த செட்டையும் 6-2 என கைப்பற்றினார். பின் 6-3, 6-2 என்ற நேர்செட்களில் சானியா மிர்சா வென்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். இதில் தரவரிசையில் 20வது இடத்திலுள்ள பவ்லிசென்கோவை (ரஷ்யா) சந்திக்கிறார்.

 

உலக கோப்பை ஹாக்கி: இந்தியா தோல்வி

ரொசாரியோ: உலக கோப்பை பெண்கள் ஹாக்கி தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் உலக கோப்பை பெண்கள் ஹாக்கி நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி உட்பட 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் நெதர்லாந்தை சந்தித்தது. போட்டியின் 8வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

 

இந்தியாவின் ராணி ராம்பால் 22 வது நிமிடத்தில் பதில் கோல் அடிக்க ஸ்கோர் சமன் ஆனது. இதன்பின் நெதர்லாந்து அணியினரின் ஆட்டத்துக்கு இந்திய வீராங்கனைகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் பாதியில் 1-3 என பின் தங்கியிருந்த இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 1-7 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியடைந்தது. நெதர்லாந்தின் பவுமென், "ஹாட்ரிக்' கோல் அடித்து அசத்தினார். இது உலக கோப்பை தொடரில் நெதர்லாந்து அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு முன் 2002ல் அயர்லாந்தை 6-0 என வென்றிருந்தது. இந்திய அணி இன்று தனது இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

 
விருந்தினர்
We have 2 guests online
உங்கள் வாக்கு
குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 
EXPLORE AZTAMIL NEWS

NEWS                               ENTERTAINMENT

SRILANKA NEWS                 AZTAMIL TV

INDIA NEWS                       AZTAMIL FM

WORLD NEWS

SPORTS NEWS

TECHNOLOGY NEWS

AZ TAMIL NEWS

Hit CounterE-mail:-aztamil@hotmail.com

                    Hotline:-+41 76 324 1491

                   

                    Locations of visitors to this page